/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்டத்தில்5 இடங்களில் போலீஸ் பட்டாசு கடை
/
மாவட்டத்தில்5 இடங்களில் போலீஸ் பட்டாசு கடை
ADDED : அக் 16, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு, ஆண்டுதோறும் போலீஸ் சார்பில் பட்டாசு கடை போடப்படுவது வழக்கம். இந்தாண்டும் அதுபோல் பட்டாசு கடை போட உள்ளனர். ஈரோடு எஸ்.பி., அலுவலகம், ஈரோடு ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை வளாகம், பெருந்துறை, சத்தி, கோபியில் பட்டாசு கடை போட உள்ளனர்.
சிவகாசியில் இருந்து நேரடியாக பட்டாசு கொள்முதல் செய்யப்பட்டு விற்கப்படுகிறது. அனைத்தும் கிப்ட் பாக்ஸ்களாக இருக்கும். இங்கு போலீசாருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பட்டாசு கிப்ட் பாக்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் அனுமதி கிடைத்தவுடன், பட்டாசு கடை திறக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.