/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போதையில் எஸ்.ஐ.,யை தாக்கிய 5 பேரிடம் போலீசார் விசாரணை
/
போதையில் எஸ்.ஐ.,யை தாக்கிய 5 பேரிடம் போலீசார் விசாரணை
போதையில் எஸ்.ஐ.,யை தாக்கிய 5 பேரிடம் போலீசார் விசாரணை
போதையில் எஸ்.ஐ.,யை தாக்கிய 5 பேரிடம் போலீசார் விசாரணை
ADDED : ஏப் 15, 2024 03:41 AM
ப.வேலுார்: பரமத்தி வேலுார் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணிபுரிந்து வருபவர் குமார், 35; இவர், நேற்று மாலை, 6:00 மணிக்கு சுண்டப்பனை பிரிவு அருகே, விபத்தில் சேதமான டூவீலரை எடுத்து வர, வாடகை மினி ஆட்டோவுடன் சென்றார். திரும்பி வரும்போது, சுண்டப்பனை பிரிவில் சாலையில் அமர்ந்து, 5 பேர் மது அருந்திக்கொண்டிருந்தனர். மினி ஆட்டோ அப்பகுதியை கடக்க முடியாததால், அங்கிருந்த நபர்களிடம் மினி ஆட்டோ டிரைவர் பரத்குமார், 30, வழிவிட்டு அமருமாறு கூறியுள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அவர்கள், அருகில் இருந்த கல்லை எடுத்து ஆட்டோ கண்ணாடியை உடைத்துள்ளனர்.
ஆட்டோ பின்னால் வந்து கொண்டிருந்த, ப.வேலுார் எஸ்.ஐ., குமார், 5 பேரிடமும் விசாரித்துக்கொண்டிருந்தார். அப்போது, 5 பேரும் எஸ்.ஐ., குமாரிடம் வாக்குவாதம் செய்து, தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த எஸ்.ஐ., குமார், ப.வேலுார் இன்ஸ்பெக்டர் ரங்கசாமியிடம் தகவல் தெரிவித்தார். அவர் சம்பவ இடத்துக்கு சென்று நடத்திய விசாரணையில், ராமதேவன் கிராமத்தில் வி.ஏ.ஓ.,வாக பணிபுரியும் சிவப்பிரகாசம், 41, ப.வேலுாரை சேர்ந்த டாக்டர் லேனின், 27, முகிலன், 26, பொத்தனுாரை சேர்ந்த திலீபன், 32, பூபதி, 34, என, தெரியவந்தது.
இதுகுறித்து, டி.எஸ்.பி., சங்கீதா விசாரணை நடத்தி வருகிறார். எஸ்.ஐ., குமார் ப.வேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

