/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காவலர், ஓ.ஏ., பணி எம்.பி., ஆணை வழங்கல்
/
காவலர், ஓ.ஏ., பணி எம்.பி., ஆணை வழங்கல்
ADDED : நவ 26, 2025 01:39 AM
நாமக்கல், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், ஒன்றிய அலுவலகங்களில் பணியாற்ற பணி நியமனம் பெற்ற, 5 பேருக்கு ஆணை வழங்கினார்.
ஒன்றிய அலுவலகங்களில் நேரடி நியமனம் மூலம், மோகனுார் ஒன்றியத்தில், இரவு காவலர், கொல்லிமலை, புதுச்சத்திரம், சேந்தமங்கலம், பள்ளிப்பாளையம் ஒன்றியங்களில், அலுவலக உதவியாளர் என, மொத்தம், 5 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், பஞ்., உதவி இயக்குனர் பிரபாகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் லீலாகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

