/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணி
/
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணி
ADDED : நவ 26, 2025 01:38 AM
திருச்செங்கோடு, பெண்களுக்கு எதிரான சர்வதேச வன்முறை ஒழிப்பு நாள் தினத்தையொட்டி, நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்க மகளிர் திட்டம் சார்பில், விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் நடந்தது. புதிய பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் அருகில் இருந்து துவங்கிய பேரணியை, நாமக்கல் மாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பேரணியில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய தட்டியை ஏந்தியபடி, பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியதை வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி சென்றனர். திருச்செங்கோடு தொகுதி கொ.ம.தே.க., - எம்.எல்.ஏ., ஈஸ்வரன், நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே வைக்கப்பட்டிருந்த பலகையில், பெண்களுக்கு எதிரான வன்முறை தினத்தை ஒட்டி நடந்த கையெழுத்து இயக்கத்தில் அனைவரும் கையெழுத்திட்டனர்.

