/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
/
போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : அக் 26, 2025 12:26 AM
ராசிபுரம், ராசிபுரம் ரோட்டரி சங்கங்கள் சார்பில், போலியோ தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. முன்னதாக ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் முன் தொடங்கிய பேரணியில், ராசிபுரம் ரோட்டரி சங்க தலைவர் சுரேந்திரன் தலைமை வகித்தார்
. ரோட்டரி கிளப் முன்னாள் உதவி ஆளுநர் ராசிபுரம் குழந்தைகள் நல மருத்துவர் ராமகிருஷ்ணன், கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். போலியோ இல்லாத உலகம் படைப்போம், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டுவோம், ஊனம் இல்லாத சமுதாயம் உருவாக்குவோம் என்பன போன்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்தவாறு கல்லுாரி மாணவர்கள் பேரணியில் பங்கேற்றனர்.
பேரணி, நாமக்கல் சாலை, பழைய ஸ்டாண்ட், கவரைத்தெரு கடை வீதி, ஆத்துார் சாலை, புதிய பஸ் ஸ்டாண்ட் வழியாக அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம் வரை, 2 கி.மீ., தொலைவு சென்றடைந்தது. பின், போலியோவை முடிவுக்கு கொண்டு வருவோம் என, கல்லுாரி மாணவ, மாணவியர், ரோட்டரி நிர்வாகிகள் உறுதியேற்றனர். இந்திய மருத்துவ சங்கம், ரோட்ராக்ட் கிளப் நிர்வாகிகள், அரசு, தனியார் கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

