ADDED : ஜன 17, 2025 06:14 AM
குமாரபாளையம்: குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில், பொங்கல் விழா இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் கொண்டாடப்பட்டது.
போலீஸ் ஸ்டேஷன் வளாகம் முழுவதும், வண்ண மலர்களாலும், கரும்புகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஸ்டேஷன் வாசலில் வண்ண கோலமிட்டு, பொங்கல் வைக்கப்பட்டது. பொங்கல் பொங்கும் போது, போலீசார் அனைவரும் பொங்கலோ, பொங்கல் என்று குலவையிட்டு மகிழ்ந்தனர். எஸ்.ஐ.,க்கள் தங்கவேடிவேல், நடராஜ், எஸ்.எஸ்.ஐ.,க்கள் மாதேஸ்வரன், குணசேகரன், ராம்குமார், வரதராஜன், பொன்னுசாமி மற்றும் பலர் பங்கேற்றனர்.
* ராசிபுரம் போலீஸ் ஸ்டேஷனில் ஆண் போலீசார் வேட்டி, சட்டை, துண்டு அணிந்தும், பெண்கள் சேலை அணிந்தும் வந்திருந்தனர். டி.எஸ்.பி., விஜயகுமார், ராசிபுரம் இன்ஸ்பெக்டர் சுகவனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொங்கல் பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என சத்தமிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.