sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாமக்கல் மாநகராட்சி ஆபீசில் களை கட்டிய பொங்கல் விழா

/

நாமக்கல் மாநகராட்சி ஆபீசில் களை கட்டிய பொங்கல் விழா

நாமக்கல் மாநகராட்சி ஆபீசில் களை கட்டிய பொங்கல் விழா

நாமக்கல் மாநகராட்சி ஆபீசில் களை கட்டிய பொங்கல் விழா


ADDED : ஜன 12, 2025 03:37 AM

Google News

ADDED : ஜன 12, 2025 03:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில், நேற்று பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. முதலில், பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். மேயர் கலாநிதி தலைமை வகித்தார். துணை மேயர் பூபதி, கமிஷனர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்-தனர். தொடர்ந்து, பல்வேறு விளையாட்டு போட்டிகள் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில், மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, கமி-ஷனர் மகேஸ்வரி, உறுப்பினர்கள், அலுவலர்கள், ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் என அனைவரும் உற்சாகமாக பங்கேற்-றனர்.பெண்களுக்கான கயிறு இழுக்கும் போட்டியில், உறுப்பினர்கள் ஒரு அணியாகவும், கமிஷனர் மகேஸ்வரி தலைமையில், அலுவ-லர்கள் ஒரு அணியாகவும் பங்கேற்றனர். அதில், கமிஷனர் தலை-மையிலான அணி வெற்றி பெற்றது.

தொடர்ந்து, ஆண்களுக்கான கயிறு இழுக்கும் போட்டியில், மேயர் கலாநிதி தலைமையில் ஒரு அணியினர், மாநகராட்சி சுகா-தார அலுவலர் திருமூர்த்தி தலைமையில் ஒரு அணியினர் போட்-டியிட்டனர். பலம் கொண்ட இரு அணிகளும் இழுத்ததில் கயிறு அறுந்து, மேயர் அணியினர் கீழே விழுந்தனர். அதனால், அங்கு சிரிப்பலை எழுந்தது. இருந்தும், யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.






      Dinamalar
      Follow us