ADDED : ஜன 14, 2024 12:27 PM
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அடுத்த, குப்பநாயக்கனுாரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடந்தது.
அட்மா குழு தலைவர் அசோக்குமார், எம்.எல்.ஏ., பொன்னுசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, ரொக்க பணம் ரூ.1,000, வேட்டி, சேலை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை எம்.பி., ராஜேஸ்குமார், வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கலெக்டர் உமா ஆகியோர் வழங்கினர்.
விழாவில் எம்.பி., ராஜேஸ்குமார் பேசுகையில், ''விவாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மகளிர் உரிமை தொகை ரூ.1,000 தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விரைவில் வழங்கப்படும். முதல்வர் ஸ்டாலின் தேர்தலின் போது அறிவித்த அனைத்து திட்டங்களும் நிறைவேற்றுப்பட்டு வருகிறார்,'' என்றார்.
அட்மா குழு துணைத்தலைவர் தனபாலன், நகர செயலாளர் முருகேசன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விஸ்வநாத், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, தாசில்தார் சீனிவாசன், துணை தாசில்தார் பாஸ்கரன், தொ.வே.கூ.க.,சங்க செயலாளர்கள் ஜெயக்குமார், மணிவண்ணன், பி.டி.ஏ., தலைவர் கிருஷ்ணகுமார், டி.எஸ்.ஓ., கிருஷ்ணவேணி உட்பட பலர் பங்கேற்றனர்.

