/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
32 ஆண்டாக உழைத்தவர்களுக்கு மட்டுமே பதவி: த.வெ.க., பொதுச்செயலாளர் பேச்சு
/
32 ஆண்டாக உழைத்தவர்களுக்கு மட்டுமே பதவி: த.வெ.க., பொதுச்செயலாளர் பேச்சு
32 ஆண்டாக உழைத்தவர்களுக்கு மட்டுமே பதவி: த.வெ.க., பொதுச்செயலாளர் பேச்சு
32 ஆண்டாக உழைத்தவர்களுக்கு மட்டுமே பதவி: த.வெ.க., பொதுச்செயலாளர் பேச்சு
ADDED : ஜூலை 23, 2025 01:47 AM
நாமக்கல்,நாமக்கல் மேற்கு மாவட்ட, த.வெ.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் பங்கேற்றார்.
அவர் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் இருந்து, விக்கிரவாண்டி மாநாட்டிற்கு, 10,000 பேர் வருகை தந்தீர்கள். அடுத்த மாதம் மதுரையில், 2-வது மாநில மாநாடு நடக்கிறது. அதற்கு, நீங்கள் அனைவரும் வருகை தர வேண்டும். நம் கட்சியில் யாரெல்லாம் உழைத்தார்களோ அவர்களுக்கு தான் பதவி வழங்கப்பட்டுள்ளது. யாராவது புதிதாக வந்து கட்சியில் சேருவார்கள். அவர்களுக்கு பதவி கொடுத்தால், இந்த பதவி சரிவராது என்று சொல்லி சென்று விடுவார்கள். அதனால், 32 ஆண்டுகளாக உழைத்து கொண்டே இருப்பவர்களுக்கு மட்டுமே பதவி வழங்கப்பட்டுள்ளது.
நம் தலைவர் சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போது தான் அரசியலுக்கு வந்துள்ளார். தனக்கு உச்சத்தை கொடுத்த மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளார். நிச்சயம், 2026-ல் முதல்வராக பதவி ஏற்பார்.
நாமக்கல் மாவட்டத்தில், ஆறு தொகுதிகளிலும் தலைவர் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், அவரை வெற்றிபெற செய்ய வேண்டும். 234 தொகுதிகளிலும், தலைவர் போட்டியிடுவதாக நினைத்து பணியாற்ற வேண்டும். கருத்து வேறுபாடுகளை மறந்து செயல்பட வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் என்னென்ன பிரச்னை இருக்கிறது என்பதை ஆராய்ந்து, தலைவர் அனுமதியுடன் போராட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

