/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அஞ்சல் துறை ஊழியர்கள் தேசிய கொடி பேரணி
/
அஞ்சல் துறை ஊழியர்கள் தேசிய கொடி பேரணி
ADDED : ஆக 15, 2024 06:55 AM
நாமக்கல்: நாமக்கல் அஞ்சல் துறை ஊழியர்கள், நேற்று தேசிய கொடியுடன் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இன்று, 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என, கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, நாமக்கல் கோட்ட இந்திய அஞ்சல் துறை சார்பில், 'ஹர் கர் திரங்கா-3.0' என்ற, இல்லம் தோறும் தேசியக்கொடி ஏற்றுவோம் என்பதை, ஊக்கப்படுத்தும் விதமாக, அஞ்சல் ஊழியர்கள் அனைவரும், நேற்று தேசியக்கொடியை ஏந்தியபடி பேரணியாக சென்றனர்.அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் இந்திரா, கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். பேரணி, ஸ்டேட் பாங்க், திருச்சி சாலை, மணிக்கூண்டு, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மோகனுார் சாலை, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் வழியாக சென்று மீண்டும் தலைமை அஞ்சலகத்தை அடைந்தது. கோட்ட துணை கண்காணிப்பாளர் அண்ணாமலை, தலைமை அஞ்சலக போஸ்ட் மாஸ்டர் வேலுசாமி உள்பட அஞ்சலக ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.