/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மே 3ல் கோழி பண்ணையாளர்கள், வியாபாரிகள் சந்திப்பு கூட்டம்
/
மே 3ல் கோழி பண்ணையாளர்கள், வியாபாரிகள் சந்திப்பு கூட்டம்
மே 3ல் கோழி பண்ணையாளர்கள், வியாபாரிகள் சந்திப்பு கூட்டம்
மே 3ல் கோழி பண்ணையாளர்கள், வியாபாரிகள் சந்திப்பு கூட்டம்
ADDED : ஏப் 25, 2025 02:00 AM
நாமக்கல்:
நாமக்கல்லில் மே 3ம் தேதி முட்டை கோழி பண்ணையாளர்கள், வியாபாரிகள் சந்திப்பு கூட்டம் நடக்கிறது. இது குறித்து, தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின், நாமக்கல் மண்டல தலைவர் சிங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
மே 3ம் தேதி நாமக்கல் கோஸ்டல் ரெசிடென்சி ஹோட்டலில் முட்டை கோழி பண்ணையாளர்கள் மற்றும் முட்டை வியாபாரிகள் சந்திப்பு நிகழ்வு நடை பெற உள்ளது. அதில், தமிழக லைன் வியாபாரிகள், கேரளா லைன் வியாபாரிகள், பாண்டிச்சேரி லைன் வியாபாரிகள், பெங்களூரு வியாபாரிகள், சென்னை வியாபாரிகள், ஏற்றுமதிக்காக முட்டை வாங்கும் வியாபாரிகள், முட்டை ஏற்றுமதியாளர்கள், சத்துணவு சப்ளைக்காக முட்டை வாங்கும் வியாபாரிகள் மற்றும் சத்துணவு சப்ளை செய்பவர்கள் உள்ளிட்ட வியாபாரிகள் இந்நிகழ்ச்சியில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.