/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டூவீலர் குறுக்கே நாய் பாய்ந்து கோழிப்பண்ணை ஓனர் பலி
/
டூவீலர் குறுக்கே நாய் பாய்ந்து கோழிப்பண்ணை ஓனர் பலி
டூவீலர் குறுக்கே நாய் பாய்ந்து கோழிப்பண்ணை ஓனர் பலி
டூவீலர் குறுக்கே நாய் பாய்ந்து கோழிப்பண்ணை ஓனர் பலி
ADDED : டிச 24, 2024 01:50 AM
டூவீலர் குறுக்கே நாய் பாய்ந்து கோழிப்பண்ணை ஓனர் பலி
மல்லசமுத்திரம், டிச. 24-
சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி, எஸ்.பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் மோகன், 52; கோழிப்பண்ணை உரிமையாளர். இவர் கடந்த, 21 இரவு, 10:00 மணியளவில், 'ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் பிளஸ்' டூவீலரில் பாலிக்காடு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, நாய் ஒன்று டூவீலரின் குறுக்கே பாய்ந்து ஓடியது. இதனால், நிலை தடுமாறிய மோகன், கீழே விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். நேற்று காலை, 9:00 மணிக்கு உயிரிழந்தார். மல்லசமுத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.