/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விசைத்தறி தொழில் மந்தம் ஆர்டருக்கு காத்திருப்பு
/
விசைத்தறி தொழில் மந்தம் ஆர்டருக்கு காத்திருப்பு
ADDED : ஜன 19, 2025 06:53 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம், ஆவத்திபாளையம், ஆயக்காட்டூர், காவிரி, அண்ணா நகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில், முக்கிய தொழி-லாக விசைத்தறி உள்ளது. விசைத்தறியில் சட்டை, லுங்கி, வேட்டி, துண்டு உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்-படும் துணிகள், இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நல்ல நிலையில் இருந்த விசைத்தறி தொழில், கடந்த சில ஆண்டாக தொய்வு நிலையில் உள்ளது. கடந்த தீபா-வளி, பொங்கல் பண்டிகைக்கும் கூட எதிர்பார்த்த ஆர்டரும், விற்-பனையும் இல்லை. இதனால் உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிக்-கப்பட்டனர்.
இதுகுறித்து, பள்ளிப்பாளையம் வட்டார விசைத்தறி உற்பத்தி-யாளர் சங்க தலைவர் கந்தசாமி கூறுகையில், ''சில ஆண்டாக விற்பனை குறைந்ததால், உற்பத்தி செய்த துணிகள் தேக்கமடைந்-துள்ளன. இதனால், விசைத்தறி தொழில் சரிவை நோக்கி சென்-றது. ஆர்டரும் குறைந்து விட்டது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில், வழக்கமான ஆர்டரும், விற்பனையும் வரும் என, எதிர்பார்த்து காத்துள்ளோம்,'' என்றார்.

