ADDED : அக் 02, 2024 02:02 AM
3ல் மின் நிறுத்தம் ரத்து
குமாரபாளையம், அக். 2-
குமாரபாளையம் பகுதியில், நாளை (அக்., 3) அறிவிக்கப்பட்டிருந்து மின் நிறுத்தம் ரத்து செய்யப்படுகிறது என, பள்ளிபாளையம் செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:குமாரபாளையம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட, குமாரபாளையம் நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், சடையம்பாளையம், டி.வி.நகர், புள்ளாக்கவுண்டம்பட்டி, அக்ரஹாரம், கத்தேரி, சாமியம்பாளையம், தொட்டிபாளையம், கொடாரபாளையம், தட்டான்குட்டை, எதிர்மேடு, வட்டமலை, கல்லங்காட்டுவலசு, வேமன்காட்டுவலசு, கோட்டைமேடு, வளையக்காரனுார் உள்ளிட்ட பகுதிகளில், நாளை காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, சில நிர்வாக காரணங்களால், பராமரிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளவ. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.