ADDED : ஜூலை 09, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த ஆனங்கூர் துணை மின் நிலையம் பராமரிப்பு பணிக்காக, இன்று (9ம் தேதி) அறிவிக்கப்பட்டிருந் மின்தடை, நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது.அதன்படி, தோக்கவாடி, வரப்பாளையம், கே.எஸ்.ஆர்., கல்வி நகர், தச்சங்காட்டுபாளையம், காடச்சநல்லுார், குப்புச்சிபாளையம், வேலாத்தாள் கோவில், டி.ஜி., பாளையம், புள்ளிகவுண்டம்பாளையம், ஆனங்கூர், சின்ன ஆனங்கூர், பழையபாளையம், புளியம்பட்டியாம்பாளையம், ஆண்டிக்காடு உள்ளிட்ட பகுதிகளில், இன்று வழக்கம்போல் மின் வினியோகம் செய்யப்படும் என, பள்ளிப்பாளையம் இயக்கமும், பராமரிப்பு செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.