/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாதபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அரசு செயலர்

ADDED : மார் 13, 2024 02:24 AM
நாமக்கல்:நாமக்கல்
கலெக்டர் அலுவலகத்தில், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
நடந்தது. கலெக்டர் உமா முன்னிலை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு
அலுவலரும், பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளருமான
குமரகுருபரன் தலைமை வகித்து பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில்
உள்ள, 322 பஞ்.,கள், 19 டவுன் பஞ்.,கள், 5 நகராட்சிகள் உள்ளிட்ட அனைத்து
பகுதிகளிலும் உள்ள பொதுமக்களுக்கு, வரும் கோடை காலத்தில் குடிநீர்
தட்டுப்பாடு ஏற்படாத வகையில், தேவையான முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் தமிழக
குடிநீர் வழங்கல் துறை மேற்கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து
ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலும், 'இ.நாம்' என்ற இணைய வழியில்
மட்டுமே பண பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு,
வேளாண் பொருட்களுக்குரிய தொகையை காலம் தாழ்த்தாமல் உடனடியாக
விடுவிக்க வேண்டும்.
இடைநின்ற மாணவர்கள், தேர்வில் தோல்வியுற்ற
மாணவர்களை கண்டறிந்து, அவர்கள் தொடர்ந்து கல்வி பயில தேவையான
ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து,
மாவட்ட தாட்கோ திட்டத்தின் மூலம், 34 தொழில் முனைவோருக்கு, 2.54 கோடி
ரூபாய் மதிப்பில், சுயதொழில் தொடங்க கடனுதவி வழங்கப்பட்டது.
டி.ஆர்.ஓ., சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல்,
அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.