/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முன்தினம்ஏரியில் தவறி விழுந்த பூசாரி உயிரிழப்பு
/
முன்தினம்ஏரியில் தவறி விழுந்த பூசாரி உயிரிழப்பு
ADDED : நவ 17, 2024 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முன்தினம்ஏரியில் தவறி விழுந்த
பூசாரி உயிரிழப்பு
மல்லசமுத்திரம், நவ. 17-
ராசிபுரம் அருகே, அத்தனுார் காட்டுகொட்டாயை சேர்ந்தவர் அண்ணாமலை, 75. இவர், மல்லசமுத்திரம் அருகே, ஊமையம்பட்டியில் உள்ள வீரமாத்தியம்மன் கோவில் பூசாரியாக இருந்தார். நேற்று பவுர்ணமி என்பதால், கோவிலில் பூஜை செய்வதற்காக, காலை மல்லசமுத்திரம் பெரிய ஏரி வழியாக நடந்து சென்றுள்ளார்.
அப்போது, ஏரியில் தண்ணீர் அதிகரித்து காணப்பட்டதால் தவறி விழுந்து உயிரிழந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அளித்த தகவல்படி, ராசிபுரம் தீயணைப்பு வீரர்கள், சடலத்தை மீட்டனர். இவருக்கு, 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். மல்லசமுத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.