ADDED : ஜூன் 12, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம், எருமப்பட்டி யூனியனில், குண்டுமல்லி சாகுபடி அதிகளவில் நடக்கிறது. விளையும் பூக்களை தினந்தோறும் பறித்து, நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் பூ மார்க்கெட்டுகளுக்கு விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டுவருகின்றனர்.
கடந்த, 5 முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் முகூர்த்த தினம் இருந்ததால், குண்டுமல்லி பூக்கள் விலை உயர்ந்து, கிலோ, 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினத்துடன் முகூர்த்த தினம் முடிந்ததால், எருமப்பட்டி பகுதியில் மீண்டும் குண்டுமல்லி பூக்கள் விலை குறைய தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம், ஒருகிலோ குண்டுமல்லி, 500 ரூபாய்க்கு விற்ற நிலையில், நேற்று, 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.