ADDED : டிச 10, 2025 10:36 AM
எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியனில், அலங்காநத்தம், பொட்-டிரெட்டிப்பட்டி, கஸ்துாரிப்பட்டி உள்ளிட்ட பகுதி-களில், விவசாயிகள் தினமும் வருமானம் தரக்-கூடிய குண்டுமல்லி பூக்களை பயிரிட்டுள்ளனர். பூக்களை கூலியாட்கள் மூலம் பறித்து,
நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடக்கும் பூ மார்க்கெட்டிற்கு அனுப்பி வருகின்-றனர்.சில நாட்களாக, எருமப்பட்டி பகுதியில் பெய்த தொடர் மழையால், குண்டுமல்லி பூக்கள் வரத்து குறைந்தது.
இதனால், குண்டுமல்லி கிலோ, 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது, மழை குறைந்து வெயில் அடிக்க துவங்கியுள்ளதாதல், செடிகளில் பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், சாதாரண நாட்களில், 700 ரூபாய்க்கு விற்ற குண்டுமல்லி, கடந்த, இரண்டு நாட்களாக கிலோ, 400 ரூபாய்க்கு விற்-பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், விவ-சாயிகள் கவலையடைந்துள்ளனர்.

