/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமையில் பணி வழங்கணும்
/
அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமையில் பணி வழங்கணும்
அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமையில் பணி வழங்கணும்
அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமையில் பணி வழங்கணும்
ADDED : மார் 31, 2025 03:01 AM
நாமக்கல்: ஊரக மின்விசைப்பம்பு பராமரிப்பு மற்றும் ஒப்பந்ததாரர்கள் நலச்-சங்கத்தினர், மாநில பொதுக்குழு கூட்டம், நாமக்கல்லில் நேற்று
நடந்தது.
மாநில தலைவர் புள்ளியப்பன் தலைமை வகித்தார். செயலாளர் விஜயகுமார் வரவேற்றார். பொருளாளர் தேவராசன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், ஒப்பந்ததாரர்களான நாங்கள், 35 ஆண்டுகளாக தமி-ழக பஞ்.,களில் இயங்கி வரும் குடிநீர் மின்விசை பம்புகள் பழுது பார்க்கும் பணியில், தகுதி அடிப்படையில், 5,000க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். பத்து ஆண்டுகளாக ஒரே விலைப்புள்ளியில் வேலை செய்து வந்தோம். கடந்த ஆட்சியில், இந்த நடைமுறையை ரத்து செய்துவிட்டனர்.
தற்போதைய ஆட்சியில், பழைய நடைமுறைகளை போலவே மீண்டும் பணியை புதுப்பித்தும், பத்து ஆண்டுகளாக உயர்த்-தாமல் உள்ள பொருட்களின் விலையை உயர்த்தி கொடுத்து, 5,000 குடும்பங்களில் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
மாவட்ட வாரியாக சங்கத்தை பதிவு செய்ய வேண்டும். ஒப்பந்த பதிவு பெற்ற, அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை தந்து பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.