/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷன் அவசியம்
/
மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷன் அவசியம்
ADDED : டிச 06, 2025 06:25 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பகுதிக்கு மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான குடியிருப்-புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதியில் விதிமுறை மீறி மது பாட்டில் விற்பனை நடந்து வருகிறது. இதனால், குடியிருப்பு பகு-தியில் வசிக்கும் மக்கள் அவதிப்படுகின்றனர். பெண்களுக்கு பாது-காப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது. பள்ளிப்பாளையம் போலீ-சாரும் இந்த விதிமுறை மீறி மது பாட்டில் விற்பனை செய்யப்படு-வதை பெரிதாக கண்டுகொள்வதில்லை.திருச்செங்கோடு பகுதியில் மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷன் செயல்படுகிறது. அங்கிருந்து பள்ளிப்பாளையம் பகுதிக்கு போலீசார் நேரில் வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதில் தொய்வு ஏற்படுகிறது.
எனவே, விதிமுறை மீறி மது பாட்டில் விற்பனை செய்வதை தடுக்க, பள்ளிப்பாளையம் பகுதியில் மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

