sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மரவள்ளியில் மாவு பூச்சி தாக்குதல் பயிரிட்ட விவசாயிகள் வேதனை

/

மரவள்ளியில் மாவு பூச்சி தாக்குதல் பயிரிட்ட விவசாயிகள் வேதனை

மரவள்ளியில் மாவு பூச்சி தாக்குதல் பயிரிட்ட விவசாயிகள் வேதனை

மரவள்ளியில் மாவு பூச்சி தாக்குதல் பயிரிட்ட விவசாயிகள் வேதனை


ADDED : டிச 06, 2025 06:25 AM

Google News

ADDED : டிச 06, 2025 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நாமகிரிபேட்டை டவுன் பஞ்., மற்றும் ஒன்றிய பகுதிகளான குருவாளா, குள்ளாண்டிக்காடு, சீராபள்ளி, தண்ணீர்பந்தல்காடு உள்ளிட்ட பகுதிகளில், 4,000க்கும் மேற்பட்ட விவசாயிகள், தங்க-ளது நிலங்களில் மரவள்ளி கிழங்கு பயிரிட்டுள்ளனர்.

நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் மட்டும், 3,000 ஹெக்டேர் அளவிற்கு மரவள்ளி உள்ளது.இந்நிலையில், சில மாதங்களாகவே மரவள்ளி பயிரில் மாவு பூச்சி தாக்குதல் அதிகரித்து வருகிறது. வேளாண் ஆரய்ச்சி மையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒட்டுண்ணி மூலமும் மாவு பூச்-சியை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரமுடியவில்லை.

சில வாரங்களுக்கு முன்பு தான், வேளாண்துறையினர் ஒட்-டுண்ணி மூலம் மாவு பூச்சியை கட்டுப்படுத்தியதை விழாவாக கொண்டாடினர். இந்நிகழ்ச்சி முடிந்த சில வாரங்களிலேயே மர-வள்ளி விவசாயிகள் மாவுபூச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உடனடியாக இதற்கு வேளாண்துறையினர் தீர்வு காணா-விட்டால், விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் பல லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்படும் என, வேதனையுடன் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us