/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
8ல் வெள்ளையம்மாள் கோவில் கும்பாபிஷேகம்
/
8ல் வெள்ளையம்மாள் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : டிச 06, 2025 06:24 AM
நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டையில் பிரசித்தி பெற்ற மதுரை வீரன், வெள்-ளையம்மாள், பொம்மி அம்மன், முனீஸ்வரர், சப்த கன்னிமார் கோவில்கள் உள்ளன.
இந்த கோவில்களின் சீரமைப்பு பணி முடிந்து வரும், 8ல் கும்பாபிஷேக விழா நடக்கவுள்ளது. முன்ன-தாக, கடந்த வாரம், ஞாயிற்றுக்கிழமை விழா தொடங்குவதற்காக முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி, கங்கணம் கட்டுதல், முளைப்பாரி போடுதல், உப்பு பருப்பு வாங்குதல் நிகழ்ச்சி நடந்தது.நாளை காலை, பெருமாள் கோவிலில் இருந்து கங்கா, யமுனா, காவிரி ஆகிய புன்னிய நதி தீர்த்தங்கள், முளைப்பாரியுடன் ஊர்-வலம் நடக்கிறது. மாலை, மங்கள இசை, கணபதி பூஜை, புண்-ணியாக வாஜனம் ஆகியவையுடன் யாகவேள்வி தொடங்குகிறது. இரவு, 9:00 மணிக்கு தீபாராதனை, பிரசாதம் வழங்கப்படும். இரவு, 12:00 மணிக்கு மதுரை வீரன், வெள்ளையம்மன், பொம்மி அம்மன், முனீஸ்வரர், சப்த கன்னிமார்களுக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
திங்கட்கிழமை காலை, 4:00 மணிக்கு கலச பூஜை, கணபதி ஹோமம், நாடிசந்தானம், 108 வேத காயத்ரி ஹோமம் நடக்கி-றது. காலை, 7:00 மணிக்கு புனிதநீர் கலசம் மீது ஊற்றி கும்பாபி-ஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, சுவாமிகளுக்கு தீபாராதனை மற்றும் அன்னதானம் நடக்கிறது.

