/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வர்த்தக சங்கம் கோரிக்கை
/
காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வர்த்தக சங்கம் கோரிக்கை
காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வர்த்தக சங்கம் கோரிக்கை
காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வர்த்தக சங்கம் கோரிக்கை
ADDED : டிச 06, 2025 06:24 AM
ப.வேலுார்: ப.வேலுார் நகர அனைத்து வர்த்தக சங்கம் சார்பில், வர்த்தக சங்க திருமண மண்டபத்தில், நேற்று சிறப்பு கூட்டம் நடந்தது.
ப.வேலுார் நகர அனைத்து வர்த்தக சங்க தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார். செயலாளர் சாமிநாதன், பொருளாளர் மகுட-பதி ஆகியோர் கலந்துகொண்டனர். வர்த்தக சங்க சிறப்பு கூட்-டத்தில், நாமக்கல் மாவட்டம், பிலிக்கல்பாளையத்தில் இருந்து, ஈரோடு மாவட்டம், கொடுமுடிக்கு மேல்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.அதில், நாமக்கல் மாவட்டம், பிலிக்கல்பாளையத்தில் இருந்து ஈரோடு மாவட்டம், கொடுமுடிக்கு, பொதுமக்கள் செல்லும் வகையில், காவேரி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட தமிழக அரசால் பாலம் அமைக்க, 106.05 கோடி மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. ஆனால், இந்த பாலத்திற்-கான பணி, கடந்த, இரண்டரை ஆண்டுகளாகியும் துவங்கப்ப-டாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். பொதுமக்களின் நலன் கருதி, விரைவில் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
நாமக்கல், ஈரோடு மாவட்டத்தை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்தால், வணிகம், மருத்-துவம், கல்வி, விவசாயம் மற்றும் பல தரப்பட்ட பொதுமக்க-ளுக்கு பயனுள்ளதாக இருக்கும். சேலம், நாமக்கல், ஈரோடு, மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்து சிர-மமின்றி அமைவதற்கும், பயண துாரம் குறைக்க இந்த பாலம் ஏதுவாக இருக்கும். விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்-களின் நலன் கருதி, காலம் தாழ்த்தாமல் பாலம் கட்டும் பணியை உடனடியாக துவங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
துணைத்தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, கணேசன், உதவி செய-லாளர்கள் யோகேஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

