/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பாவை கல்வி நிறுவனங்களில் ஊக்குவித்தல் சொற்பொழிவு
/
பாவை கல்வி நிறுவனங்களில் ஊக்குவித்தல் சொற்பொழிவு
ADDED : ஆக 28, 2025 01:29 AM
நாமக்கல், பாவை கல்வி நிறுவனங்களில், பெண்கள் முன்னேற்றத்திற்கான பாவையின் குறிக்கோள் என்ற அமைப்பின் அடிப்படையில், கண்ணதாசன் பாடிய பெண்மையின் மேன்மை என்ற தலைப்பில் ஊக்குவித்தல் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
பட்டிமன்ற பேச்சாளர், தமிழாசிரியர் இந்திரா விஜயலட்சுமி கலந்து கொண்டார். பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆடிட்டர்.நடராஜன் தலைமை வகித்தார். பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன் வாழ்த்தி பேசினார். பட்டிமன்ற பேச்சாளர் இந்திரா விஜயலட்சுமி பேசுகையில், '' இது தொழில்நுட்ப காலம். செயற்கை நுண்ணறிவு உலகம். எவ்வளவு தொழில் நுட்பங்கள் வந்தாலும், நம் இலக்கியங்களின் கற்பனை திறனையும், இலக்கண, இலக்கிய வன்மையையும் ஈடு செய்ய முடியாது. கவியரசர் கண்ணதாசன் திரைப்பட பாடலாசிரியராக மட்டுமின்றி, இலக்கிய செறிவுடனும், கற்பனை திறனுடனும், கவிநயத்துடனும் தனது பாடல் வரிகள் மூலம், தமிழ் இலக்கியத்தின் மேன்மை, பெண்மையின் பெருமையை எடுத்துரைத்தவர்,'' என்றார்.
முன்னதாக பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் தாளாளர் ஆகியோர், சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு மற்றும் பொன்னாடை வழங்கினர். விழாவில் கல்லுாரி முதல்வர்கள், துறைத்தலைவர்கள் கலந்துகொண்டனர்.