/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சொத்துவரி: உடனடியாக செலுத்த வேண்டுகோள்
/
சொத்துவரி: உடனடியாக செலுத்த வேண்டுகோள்
ADDED : டிச 14, 2024 01:03 AM
மல்லசமுத்திரம், டிச. 14-
மல்லசமுத்திரம் டவுன் பஞ்., செயல் அலுவலர் மூவேந்திர பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில், 2024-25ம் ஆண்டிற்கான சொத்து வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் உரிமக்கட்டணங்கள் உள்ளிட்ட கட்டணங்களை இதுவரையில் செலுத்தாத பொதுமக்கள், நிலுவையின்றி உடனடியாக செலுத்திட வேண்டும்.
மேலும், குடிநீர் கட்டணம் செலுத்தாத பொதுமக்களுக்கு பலமுறை அறிவிப்பு கடிதம் வழங்கப்பட்டும், தற்போது வரை
கட்டணம் செலுத்தாத குடியிருப்புதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்பு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி துண்டிக்கப்படும். அதுமட்டுமல்லாது, சொத்துவரியை அந்தந்த அரையாண்டிற்குள் செலுத்த தவறும்பட்சத்தில் அபராதத்துடன் செலுத்த நேரிடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.