/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த தறித்தொழிலாளிக்கு 'காப்பு'
/
கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த தறித்தொழிலாளிக்கு 'காப்பு'
கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த தறித்தொழிலாளிக்கு 'காப்பு'
கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த தறித்தொழிலாளிக்கு 'காப்பு'
ADDED : மே 09, 2024 06:40 AM
பள்ளிப்பாளையம் : பள்ளிப்பாளையம் அருகே, தாஜ்நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 62. இவர் கடந்த, ஜன., 6ல் கீழ்காலனி பகுதியில் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
போலீசார் விசாரணையில், ஆறுமுகத்தை கொலை செய்தது, தாஜ்நகர் பகுதியை சேர்ந்த தறித்தொழிலாளி ரவி என தெரியவந்தது. இதையடுத்து, ரவியை பள்ளிப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
மேலும், இந்த கொலையில் தொடர்புடைய சேலத்தை சேர்ந்த தறித்தொழிலாளி சக்திவேல் என்பவரை போலீசார் தேடி வந்தனர். 5 மாதமாக தலைமறைவாக இருந்த சக்திவேல், நேற்று பள்ளிப்பாளையம் பகுதியில் சுற்றிக்கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, அங்கு சுற்றித்திரிந்த சக்திவேலை கைது செய்தனர்.