/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பகுதிநேர ஆசிரியரை நிரந்தரமாக்கணும் ஏமாற்றினால் ஜாக்டோ-ஜியோவுடன் போராட்டம்
/
பகுதிநேர ஆசிரியரை நிரந்தரமாக்கணும் ஏமாற்றினால் ஜாக்டோ-ஜியோவுடன் போராட்டம்
பகுதிநேர ஆசிரியரை நிரந்தரமாக்கணும் ஏமாற்றினால் ஜாக்டோ-ஜியோவுடன் போராட்டம்
பகுதிநேர ஆசிரியரை நிரந்தரமாக்கணும் ஏமாற்றினால் ஜாக்டோ-ஜியோவுடன் போராட்டம்
ADDED : டிச 31, 2025 05:55 AM
நாமக்கல்: 'ஜன., 6க்குள் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் அறிவிப்பை தமிழக முதல்வர் அறி-விக்க வேண்டும். ஏமாற்றினால், ஜாக்டோ--ஜியோ அமைப்புடன் இணைந்து போராடுவோம்' என, --தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்ட-மைப்பு, மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்-குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில், 2021 தேர்தலில், பகுதிநேர ஆசிரி-யர்களுக்கு கொடுத்த பணி நிரந்தர வாக்குறு-தியை, முதல்வர் ஸ்டாலின் ஆட்சி முடியும் நேரத்திலும் நிறைவேற்றாமல், காலத்தை கடத்-துவது ஒருபோதும் பெருமை சேர்க்காது. 2021 தேர்தலுக்கு கொடுத்த வாக்குறுதியே நிறைவேற்-றாத நிலையில், வரும், 2026ல், சட்டசபை தேர்த-லுக்கு, வாக்குறுதி தயாரிக்க, தமிழக முதல்வர் ஸ்டாலின் குழுவை அமைத்துள்ளது கேலிக்கூத்-தாக உள்ளது. 15 ஆண்டுகளாக, தற்காலிகமாக பணிபுரிகின்ற பகுதிநேர ஆசிரியர்கள், தற்போது, 12,500 ரூபாய் சம்பளத்தை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்த முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.
மே மாதம் சம்பளம், பொங்கல் போனஸ், மருத்-துவ காப்பீடு, வருங்கால வைப்பு நிதி, இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் போன்றவற்றை ஒரு-போதும் அரசு வழங்கவில்லை. இதனால், 12,000 ஆசிரியர் குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்-பட்டு வருகின்றன. அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி நிர்ணயித்து, காலமுறை சம்-பளம் வழங்கினால் மட்டுமே அரசு சலுகைகள் கிடைக்கும்.
இதற்காக, முதல்வர் ஸ்டாலின் தன் அமைச்சர-வையில் கொள்கை முடிவாக, பகுதிநேர ஆசிரி-யர்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவிக்க வேண்டும். வரும் ஜன., 6க்குள் முதல்வர் அறி-விக்க உள்ள அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான அறிவிப்பில், பகுதி நேர ஆசிரியர்களுக்கான பணி நிரந்தரம் அறிவிப்பையும் சேர்த்து அறி-விக்க
வேண்டும்.
ஜன., 6க்குள் முதல்வர் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் என அறிவித்தால் பாராட்டுவோம். ஏமாற்றினால், ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் சேர்ந்து போராடுவோம். பணி நிரந்தரத்திற்காக போராடுகின்ற, 12,000 பகுதி நேர ஆசிரியர் குடும்-பங்களின் கண்ணீருக்கு நீதியை முதல்வரின் திராவிட மாடல் அரசு சமூக நீதி அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

