/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோவிலில் கூடுதல் கட்டளைதாரர்கள் சேர்க்கப்படுவதை கண்டித்து மறியல்
/
கோவிலில் கூடுதல் கட்டளைதாரர்கள் சேர்க்கப்படுவதை கண்டித்து மறியல்
கோவிலில் கூடுதல் கட்டளைதாரர்கள் சேர்க்கப்படுவதை கண்டித்து மறியல்
கோவிலில் கூடுதல் கட்டளைதாரர்கள் சேர்க்கப்படுவதை கண்டித்து மறியல்
ADDED : ஆக 20, 2025 01:36 AM
புதுச்சத்திரம், புதுச்சத்திரம் அருகே, ஏழுரில் பிரசித்தி பெற்ற தேசிகநாதர் பண்ணையம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆவணி மாதம் தேர் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். 70 ஆண்டாக நடத்தப்படும் இந்த திருவிழாவில், ஏழு சமுதாயத்தினர் கட்டளைதாரர்களாக உள்ளனர். இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், கோவையை சேர்ந்த ஒருவர், 'தன்னையும் கட்டளை தாரராக சேர்க்க வேண்டும்' என, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணை நடத்திய நீதிமன்றம், எட்டாவது கட்டளைதாரராக, மனுதாரரை சேர்க்க உத்தரவிட்டது.
இதையறிந்த மற்ற கட்டளைதாரர்கள், 'எட்டாவதாக ஒருவரை சேர்க்க கூடாது' எனக்கூறி, நேற்று புதன்சந்தை அருகே ஏழுர் பிரிவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் கோமதி, சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, 'எட்டாவது கட்டளைதாரராக சேர்க்கப்பட்டவரை நீக்கும் வரை போராட்டம் தொடரும்' என, மறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு வந்த ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் சாமிநாதன், நைனாமலை கோவில் செயல் அலுவலர் கீர்த்தனா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 'கோவில் நிர்வாகிகள் சார்பில் மனு கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்ததையடுத்து, மக்கள் மறியலை விட்டு கலைந்து சென்றனர்.