/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முதல்வரை கண்டித்து ஆர்ப்பாட்டம் ராசிபுரத்தில் பா.ம.க.,வினர் 50 பேர் கைது
/
முதல்வரை கண்டித்து ஆர்ப்பாட்டம் ராசிபுரத்தில் பா.ம.க.,வினர் 50 பேர் கைது
முதல்வரை கண்டித்து ஆர்ப்பாட்டம் ராசிபுரத்தில் பா.ம.க.,வினர் 50 பேர் கைது
முதல்வரை கண்டித்து ஆர்ப்பாட்டம் ராசிபுரத்தில் பா.ம.க.,வினர் 50 பேர் கைது
ADDED : நவ 28, 2024 01:18 AM
முதல்வரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ராசிபுரத்தில் பா.ம.க.,வினர் 50 பேர் கைது
ராசிபுரம், நவ. 28-
ராசிபுரத்தில், தமிழக முதல்வரை கண்டித்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.,வினர், 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாக, அமெரிக்கா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள விவகாரத்தில், தமிழக மின்வாரியத்தின் பெயரும் இருப்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார். இதுகுறித்த கேள்விக்கு, 'ராமதாசுக்கு வேறு வேலை இல்லை. தினமும் அறிக்கை வெளியிடுகிறார். அதற்கு பதில் கூற அவசியம் இல்லை' என, தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார். முதல்வரின் இந்த பதில், பா.ம.க.,வினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 'தமிழக முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார். தொடர்ந்து, இக்கோரிக்கையை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் பா.ம.க.,வினர் மறியல் போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் எம்.ஜி.ஆர்., சிலை அருகே, நேற்று பா.ம.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்ட செயலாளர் பொன்னுசாமி, மாவட்ட கவுன்சிலர் வடிவேலன் ஆகியோர் தலைமை வகித்தனர். ராமதாஸ் மீதான தரக்குறைவான விமர்சனத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இந்நிலையில், அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட, பா.ம.க.,வை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட கட்சியினரை, ராசிபுரம் போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.