/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாயக்கழிவு நீரால் பாதிப்பு கண்டன ஆர்ப்பாட்டம்
/
சாயக்கழிவு நீரால் பாதிப்பு கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 12, 2024 01:32 AM
பள்ளிப்பாளையம், டிச. 12-
பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான சாய ஆலைகள் செயல்படுகின்றன. இந்த சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் தண்ணீரால், காவிரி ஆற்று தண்ணீர் மாசடைகிறது. மேலும், நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது.
இந்த தண்ணீரை பயன்படுத்தும் மக்களுக்கு உடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, சாயக்கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும்.
விதிமுறை மீறி செயல்படும் சாய ஆலைகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கொங்கு விடுதலைப்புலிகள் கட்சி சார்பில், மாநில பொதுச்செயலாளர் விஸ்வநாதன் தலைமையில், நேற்று காலை பள்ளிப்பாளையம் அருகே வசந்த நகர் பஸ் ஸ்டாப் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், சாயக்கழிவுநீரால் ஒருவர் பாதிக்கப்பட்டது போல கட்டிலில் படுக்க வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். லோக் ஜனசக்தி கட்சியின் பொதுச்செயலாளர் ஆதவன், திராவிட விடுதலை கழகம் மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.