மொபைல் ஆப் மூலம் செய்யும் பணிகளை புறக்கணித்து போராட்டம்
மொபைல் ஆப் மூலம் செய்யும் பணிகளை புறக்கணித்து போராட்டம்
ADDED : ஜூலை 09, 2026 04:29 AM
நாமக்கல்:வரும், 16 தேதி முதல் மொபைல் ஆப் மூலம் செய்யும் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்துவது என, தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல்லில், தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தை, மாவட்ட செயலாளர் தனசேகரன் துவக்கி வைத்தார். நிர்வாகி கார்த்திஸ் தலைமை வகித்தார். கூட்டத்தில், சுகாதார ஆய்வாளர் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். வரும் 16ம் தேதி முதல் மொபைல் ஆப் மூலம் செய்யப்படும் பணிகளை புறக்கணித்து போராட்டத்தை நடத்துவது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தலைவராக ரவி, துணைதலைவர் முருகேசன், செயலாளராக தனசேகரன், இணை செயலாராக ராஜகணபதி, பொருளாளராக செல்வகுமார், தணிக்கையாளராக சுந்தரேசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் செயலாளர் முருகேசன், அரசு ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர் இளங்கோவன் மற்றும் நகராட்சி மற்றும் மாநகராட்சி ஊழியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் தியாகராஜன், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வேலுசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
