/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பி.டி.ஓ., பேச்சுவார்த்தையால் கைவிடப்பட்ட போராட்டம்
/
பி.டி.ஓ., பேச்சுவார்த்தையால் கைவிடப்பட்ட போராட்டம்
பி.டி.ஓ., பேச்சுவார்த்தையால் கைவிடப்பட்ட போராட்டம்
பி.டி.ஓ., பேச்சுவார்த்தையால் கைவிடப்பட்ட போராட்டம்
ADDED : டிச 31, 2025 05:49 AM
எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் யூனியன், போக்கம்பாளையம் கிராமம், காந்திநகர் பகுதியில், 50க்கும் அதிக-மான குடியிருப்பில் மக்கள் வசித்து வருகின்-றனர். இப்பகுதியில், கடந்த, 20 நாட்களாக மின்-மோட்டார் பழுதடைந்ததால் குடிநீர் வரவில்லை.
இதனால், 2 கி.மீ., தொலைவு சென்று குடிநீர் பிடித்து பயன்படுத்தி வந்தனர். நேற்று மாலை, 3:00 மணிக்கு எலச்சிபாளையம் பி.டி.ஓ., அலுவ-லகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்து-வது என மக்கள் முடிவு செய்திருந்தனர்.
போராட்ட குழுவினரை தொடர்புகொண்ட எலச்-சிபாளையம் பி.டி.ஓ., பாலவிநாயகம், 'இரண்டு நாட்களுக்குள் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவ-டிக்கை எடுக்கப்படும்' என, உறுதியளித்ததை அடுத்து, மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.