/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அடிப்படை வசதி கோரி ஆர்ப்பாட்டம்
/
அடிப்படை வசதி கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 08, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி, எருமப்பட்டி டவுன் பஞ்., நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தில், வேலை அளிக்க வலியுறுத்தியும், பழனி நகர், அம்பேத்கர் நகர், ஜீவா நகர் பகுதியில் கழிவு நீர், குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நேற்று காலை டவுன் பஞ்., அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது
. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் சிவசந்திரம் தலைமை வகித்தார். இதில் மாநில பொருளாளர் பெருமாள் கோரிக்கை குறித்து பேசினார்.