/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டாஸ்மாக் கடையை இடமாற்றக்கோரி போராட்டம்
/
டாஸ்மாக் கடையை இடமாற்றக்கோரி போராட்டம்
ADDED : ஆக 01, 2025 01:29 AM
எருமப்பட்டி, எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்து பகுதியில் செயல்படும், டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.
எருமப்பட்டி டவுன் பஞ்., முட்டாஞ்செட்டி சாலையில், டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு செயல்படும், இரண்டு டாஸ்மாக் கடைகளையும் வேறு இடத்திற்கு இட மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், எருமப்பட்டி கைகாட்டி 5 ரோட்டில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாநில செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள், பள்ளி மாணவியர் பங்கேற்று, டாஸ்மாக் கடைகளை இங்கிருந்து மாற்றம் செய்ய வேண்டும் என, வலியுறுத்தினர்.