/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியரிடமே வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

ADDED : ஏப் 18, 2025 01:51 AM
நாமக்கல், ஏப். 18
காலை சிற்றுண்டி திட்டத்தை, சத்துணவு ஊழியர்களிடமே வழங்க வேண்டும் எனக்கோரி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் கோமதி தலைமை வகித்தார். இதில், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம், 9,000 ரூபாயாக வழங்க வேண்டும். காலி பணியிடங்களை போர்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும். சமையலர், உதவியாளர்களுக்கு அமைப்பாளர் பதவி வழங்க வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஓய்வுபெறும் வயதை, 2 ஆண்டாக உயர்த்தி வழங்க வேண்டும்.
காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலிறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.மாவட்ட செயலாளர் தங்கராஜு, பொருளாளர் சாந்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், கால்நடை அலுவலர் சங்க மாநில துணை தலைவர் இளங்கோவன், நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் தியாகராஜன் சந்திரசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.