/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தார்ச்சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி மறியல்
/
தார்ச்சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி மறியல்
தார்ச்சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி மறியல்
தார்ச்சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி மறியல்
ADDED : ஜன 21, 2025 06:38 AM
ருமப்பட்டி: பவித்திரம் மலைப்பாதையில் இருந்து தோட்டமுடையான்பட்டி செல்லும் தார்ச்சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எருமப்பட்டி யூனியன், பவித்திரம் மலைப்பாதையில் இருந்து, கொல்லிமலை அடிவாரம் தோட்டமுடையான்பட்டிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த, 5 கி.மீ., சாலை, 3 ஆண்டுக்கும் மேலாக குண்டும், குழியுமாக இருந்தது. சில
மாதங்களுக்கு முன், புதிய சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது. அதை தொடர்ந்து, சாலை அமைப்பதற்காக சாலை கொத்திவிடப்பட்டது. இதன் காரண-மாக, கடந்த, 5 மாதமாக வாகனங்கள் செல்ல சிரமப்பட்டு வரு-கின்றனர். டூவீலர்களில் செல்லும் முதியவர்கள், பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். தனியார் பள்ளி பஸ்கள், சாலை மிகவும் மோசமாக இருப்பதால், போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். இந்த சாலை பணியை விரைந்து முடிக்க, அதிகாரிகளிடம் பல-முறை கோரிக்கை விடப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை பணிகள் முடிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், நேற்று நாமக்கல் - துறையூர் சாலையின்
குறுக்கே கயிற்றை கட்டி மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து சென்ற இன்ஸ்பெக்டர் யுவராஜ், எஸ்.ஐ., சாந்தகுமார் மற்றும் பி.டி.ஓ., சுகிதா ஆகியோர், மறியலில் ஈடுபட்டவர்க-ளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.
இதனால், 2 மணி நேரம் போக்குவ-ரத்து பாதிக்கப்பட்டது.