/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஓய்வூதிய சட்ட திருத்த மசோதா வாபஸ் பெறக்கோரி ஆர்ப்பாட்டம்
/
ஓய்வூதிய சட்ட திருத்த மசோதா வாபஸ் பெறக்கோரி ஆர்ப்பாட்டம்
ஓய்வூதிய சட்ட திருத்த மசோதா வாபஸ் பெறக்கோரி ஆர்ப்பாட்டம்
ஓய்வூதிய சட்ட திருத்த மசோதா வாபஸ் பெறக்கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 11, 2025 01:12 AM
நாமக்கல், ஓய்வூதிய சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெறக்கோரி, நாமக்கல்லில் மாவட்ட சிவில் ஓய்வூதிய அமைப்பின் கூட்டுமேடை மற்றும் மாவட்ட மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர், நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைவர் ராமசாமி தலைமை வகித்தார்.
அதில், ஓய்வூதியர்களுக்கு ஊதியக்குழுவின் பலன்களை மறுக்கும் வகையில், மார்ச், 25ல் மத்திய அரசு பார்லியில் நிறைவேற்றிய ஓய்வூதிய சட்ட திருத்த மசோதவை வாபஸ்பெற வேண்டும்.
எட்டாவது ஊதியக்குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என, டில்லியில் ஜந்தர்மந்தரில் எப்.சி.பி.ஏ., சார்பில் நடக்கும் தர்ணா போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் கோஷம் எழுப்பப்பட்டது. இதில் ஓய்வூதியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.