/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அடிப்படை வசதி கேட்டு மோகனுாரில் ஆர்ப்பாட்டம்
/
அடிப்படை வசதி கேட்டு மோகனுாரில் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 29, 2025 01:30 AM
மோகனுார், மோகனுார் பஞ்., யூனியன், பெரமாண்டம்பாளையம் பஞ்., பகுதியில் முறையாக குடிநீர் வழங்கவில்லை எனவும், எஸ்.வாழவந்தி, மடக்காசம்பட்டி, கே.புதுப்பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் மோசமான நிலையில் உள்ள சாலைகளை சீர்படுத்த வேண்டும்.
ஓலப்பாளையம் ஊராட்சி கூடுதுறை, எஸ்.வாழவந்தி ஊராட்சி மேலப்பட்டி பகுதிகளில், பகுதிநேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் எனக்கூறி, பொதுமக்கள், பெண்கள் காலி குடங்களுடன், மோகனுார் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம்
நடத்தினர்.பெரமாண்டம்பாளையம் பஞ்., முன்னாள் தலைவர் ராமலிங்கம், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் சந்திரமோகன், வக்கீல் சரவணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

