/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிப்காட்' திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நெற்கதிர், கடலை பயிரை ஏந்தி ஆர்ப்பாட்டம்
/
சிப்காட்' திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நெற்கதிர், கடலை பயிரை ஏந்தி ஆர்ப்பாட்டம்
சிப்காட்' திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நெற்கதிர், கடலை பயிரை ஏந்தி ஆர்ப்பாட்டம்
சிப்காட்' திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நெற்கதிர், கடலை பயிரை ஏந்தி ஆர்ப்பாட்டம்
ADDED : மே 11, 2025 03:03 AM
நாமக்கல், வளையப்பட்டியில், 'சிப்காட்' திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, விவசாயிகள், நெற்கதிர், கடலை பயிரை கையில் ஏந்தி, நாமக்கல்லில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், மோகனுார், வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர், பரளி பகுதிகளில், 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இத்திட்டத்திற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று, நாமக்கல்லில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், விவசாயிகள் நெற்கதிர், கடலை பயிரை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாய முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி துவக்கி வைத்து பேசினார். அப்போது, 'சிப்காட்' தொழிற்பேட்டை திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்' என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்து, விவசாய முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் கூறியதாவது: வளையப்பட்டி பகுதியில், 'சிப்காட்' தொழிற்பேட்டை திட்டம் வேண்டாம் என, இரண்டரை ஆண்டுகளாக போராடி வருகிறோம். அதிகாரிகள், விளைநிலங்களை தரிசு என, தவறான தகவல்களை அனுப்பி உள்ளதை கண்டித்து போராடி வருகிறோம்.
'சிப்காட்' திட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகள் குறித்த தகவல்களை முதல்வருக்கு தெரியப்படுத்தாமல், மாவட்ட நிர்வாகத்தினர் மறைக்கின்றனர். இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில், வரும், 2026ல் நடக்கும் சட்டசபை தேர்தலில், ஆளும் அரசுக்கு எதிராக விவசாயிகள் திரும்புவர்.
இவ்வாறு அவர் கூறினார்.