/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வக்கீல் கொலையை கண்டித்து 2வது நாளாக ஆர்ப்பாட்டம்
/
வக்கீல் கொலையை கண்டித்து 2வது நாளாக ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 30, 2025 01:32 AM
ராசிபுரம், தாராபுரத்தில், வக்கீல் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, ராசிபுரம் வக்கீல்கள் சங்கத்தினர் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் நேற்று முன்தினம் சொத்து தகராறில் வக்கீல் முருகானந்தத்தை பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து வக்கீல்கள் சங்கம் மாநிலம் முழுவதும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். ராசிபுரம் அமர்வு நீதிமன்றத்தை புறக்கணித்து, வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வக்கீல்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்று தர வேண்டும் என கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன. நேற்று முன்தினமும் ஆர்ப்பாட்டம் நடந்ததால், தொடர்ந்து இரண்டாவது நாளாக நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.