/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு 'கிட்' வழங்கல்
/
துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு 'கிட்' வழங்கல்
ADDED : அக் 28, 2025 01:37 AM
திருச்செங்கோடு, திருச்செங்கோடு நகராட்சியில் பணியாற்றும் துாய்மை பணியாளர்கள், 30 பேருக்கு, பாவை பவுண்டேஷன் சார்பில் பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய, 'கிட்' வழங்கபட்டது. திருச்செங்கோடு நகராட்சி தலைவர் நளினிசுரேஷ்பாபு தலைமை வகித்தார்.
நகராட்சி கமிஷனர் வாசுதேவன், பாவை பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அந்த கிட்டில், துாய்மை பணியாளர்களுக்கான கையுறை, ஒளிரும் சட்டை, கை கிளவுஸ், மாஸ்க், ஐ வாஸ் கப், சோப்பு, சானிடைசர், டிஞ்சர், நகவெட்டி, பேண்டேஜ், பேண்ட் எய்டு உள்ளிட்டவை அடங்கிய மெடிக்கல் கிட், முழங்கால் வரையிலான காலனி உள்ளிட்ட பாதுகாப்பு கிட் வழங்கப்பட்டது.

