/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குடியிருப்பு பகுதியில் திறக்கப்பட்ட மதுபான பாருக்கு வலுக்கும் எதிர்ப்பு
/
குடியிருப்பு பகுதியில் திறக்கப்பட்ட மதுபான பாருக்கு வலுக்கும் எதிர்ப்பு
குடியிருப்பு பகுதியில் திறக்கப்பட்ட மதுபான பாருக்கு வலுக்கும் எதிர்ப்பு
குடியிருப்பு பகுதியில் திறக்கப்பட்ட மதுபான பாருக்கு வலுக்கும் எதிர்ப்பு
ADDED : அக் 28, 2025 01:36 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, குடியிருப்பு பகுதியில், கடந்த, 10 நாட்களுக்கு முன் தனியார் மதுபான பார் திறக்கப்பட்டது. இந்த பாருக்கு வருவோர் சரக்கை வாங்கிக்கொண்டு, நேராக குடியிருப்பு பகுதிக்கு சென்று விடுகின்றனர். தொடர்ந்து அங்கேயே மது குடித்துவிட்டு போதையில் அட்டகாசம் செய்கின்றனர்.
மேலும், போக்குவரத்து இடையூறாக, போதை ஆசாமிகள் சாலையில் படுத்து கொள்வது, பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தனியார் மதுபான பார் திறக்கப்பட்ட நாளில் இருந்தே குடிமகன்களால் பிரச்னை ஏற்படுகிறது. இந்த மதுபான பார் திறப்பதற்கு முன்பே, இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பொது மக்களின் எதிர்ப்பை மீறி, கடந்த, 10 நாட்களுக்கு முன் தனியார் மதுபான பார் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட தனியார் மதுபான பாரை உடனடியாக மூடக்கோரி, பா.ம.க., சார்பில் பள்ளிப்பாளையம் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் தங்கமணி, 'இந்த தனியார் மதுபான பாரை ஒரு வாரத்தில் மூட வேண்டும்; இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும்' என, கெடுவிதித்து எச்சரிக்கை செய்துள்ளார். மேலும், பல்வேறு அமைப்புகளும், இந்த தனியார் மதுபான பாரை மூடக்கோரி போராட்டம் செய்ய முன்வந்துள்ளனர். தொடர்ந்து, எதிர்ப்புகள் வலுத்து வருவதால், பள்ளிப்பாளையம் போலீசார் திணறி வருகின்றனர்.

