/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மா.திறனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கல்
/
மா.திறனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கல்
ADDED : அக் 27, 2024 01:18 AM
எருமப்பட்டி, அக். 27-
எருமப்பட்டியில், மாற்றுத்திறனாளி களுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தார். சேர்மன் சங்கீதா, எம்.பி., மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 400க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். காது, மூக்கு, தொண்டை, குழந்தைகள் மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர்.
இதில், 17 பேருக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, 5 மாற்றுத்திறனாளிகளுக்கு, முதல்வர் காப்பீட்டு அட்டை, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு, காதொலி கருவி உள்ளிட்ட, 35 பயனாளிகளுக்கு, 1.15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. டவுன் பஞ்., தலைவர் பழனியாண்டி, துணைத்தலைவர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.