/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சண்டி கருப்பசாமி கோவிலில் நாளை பிடி காசு வழங்கும் விழா
/
சண்டி கருப்பசாமி கோவிலில் நாளை பிடி காசு வழங்கும் விழா
சண்டி கருப்பசாமி கோவிலில் நாளை பிடி காசு வழங்கும் விழா
சண்டி கருப்பசாமி கோவிலில் நாளை பிடி காசு வழங்கும் விழா
ADDED : ஜூலை 23, 2025 01:43 AM
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை அடுத்த அரியாகவுண்டம்பட்டியில் பிரசித்தி பெற்ற சண்டி கருப்பசாமி, நாககன்னி மற்றும் பரிவார தெய்வங்களின் கோவில்கள் உள்ளன. மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை தினங்களில் இந்த கோவில்களில் சிறப்பு பூஜை, வாக்கு சொல்லும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. மேலும், ஆடி அமாவாசை தினத்தில் பக்தர்களுக்கு பிடிகாசு வழங்கும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
இதில், சுவாமியிடம் சில்லரை காசுகளை வைத்து பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்குவர். தங்களது பிரார்த்தனை நிறைவேறினால், பக்தர்கள் வாங்கிய பிடிகாசுபோல், இரண்டு மடங்கு சுவாமிக்கு வழங்க வேண்டும். இந்நிகழ்ச்சி, நாளை மதியம், 12:00 மணிக்கு நடக்க உள்ளது. முன்னதாக, இன்று மாலை கோவில் வளாகத்தில் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கவுள்ளது.