/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க பொது மக்கள் எதிர்ப்பு
/
நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க பொது மக்கள் எதிர்ப்பு
நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க பொது மக்கள் எதிர்ப்பு
நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க பொது மக்கள் எதிர்ப்பு
ADDED : அக் 30, 2024 06:30 AM
ராசிபுரம்: ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன் தலைமையில், நேற்று காலை உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. 9 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு, 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட 4 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். ஒன்றியத்தில் உள்ள, 11 ஊராட்சிகளில், 6 ஊராட்சிகள் ராசிபுரம் நகராட்சியுடனும், 5 ஊராட்சிகள் பிள்ளாநல்லுார் டவுன் பஞ்சாயத்துடன் இணைக்கப்படுவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மன்ற கூட்டம் நடந்த அரங்கிற்கு, 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நகராட்சி பேரூராட்சி உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுவுடன் கூட்ட அரங்குக்கு சென்றனர். கூட்ட அரங்கில் வெளிப்புறத்தில் பொதுமக்கள் மனுக்களுடன் நின்று கொண்டிருந்தனர். ஆனால், கதவுகள் பூட்டப்பட்ட நிலையில் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.
இதனால், பொதுமக்கள் சத்தம்போட தொடங்கினர். தகவலறிந்த ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன் கூட்ட அரங்கில் இருந்து வெளியே வந்து பொதுமக்களிடம் பேசினார். மனுவை பி.டி.ஓ.,விடம் கொடுத்து விடும்படி கேட்டுக்கொண்டார். மனுவவை, பி.டி.ஓ.,விடம் கொடுத்தனர். 11 ஊராட்சிகளை நகராட்சி, டவுன் பஞ்சாயத்துடன் இணைக்கும் தீர்மானத்தை கைவிடக் கோரி பொதுமக்கள் கோஷமிட்டனர்.