தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ சாலைப்பணி பாதியில் நிறுத்தம் பொதுமக்கள், மாணவர்கள் அவதி

சாலைப்பணி பாதியில் நிறுத்தம் பொதுமக்கள், மாணவர்கள் அவதி

சாலைப்பணி பாதியில் நிறுத்தம் பொதுமக்கள், மாணவர்கள் அவதி


ADDED : ஜூன் 24, 2026 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2026 05:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராசிபுரம்:ராசிபுரம் அருகே, அரசப்பாளையம் பகுதியில் சாலைப்பணி பாதியில் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ராசிபுரம் ஒன்றியம், அரசப்பாளையம் பஞ்.,க்குட்பட்ட இந்திரா காலனி பகுதியில், 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மாணவர்கள் பள்ளிக்குச் செல்லவும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்தவும் புதிய தார்ச்சாலை அமைக்க ஏற்கனவே பஞ்., நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கின.

முதற்கட்டமாக, மண் சாலையை சமப்படுத்தி அதன் மேல் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. தொடர்ந்து கிரசர் மண்ணையும் கொட்டி சாலை ஓரளவிற்கு சமப்படுத்தப்பட்டது. ஜல்லி கற்களுக்கு மேல் தார் ஊற்றும் பணி தொடங்க இருந்த நிலையில், சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், சாலை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்று பல நாட்களாகியும், கடந்த, 5 மாதங்களாக இந்த பணி மீண்டும் தொடங்கப்படாமல் அப்படியே கிடப்பில் உள்ளது. இதனால் அந்த சாலையில் கொட்டப்பட்டுள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சிதறிக் கிடக்கின்றன. இந்தப் பாதையில் நடந்து செல்வது கூட மக்களுக்கு சிரமமாக உள்ளது. குறிப்பாக, சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் மாணவர்கள், சறுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us