தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/போராட்ட நாட்களை வரன்முறைப்படுத்த தீர்மானம்

போராட்ட நாட்களை வரன்முறைப்படுத்த தீர்மானம்

போராட்ட நாட்களை வரன்முறைப்படுத்த தீர்மானம்


ADDED : ஜூன் 24, 2026 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2026 05:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:'சம வேலைக்கு சம ஊதியம்' கேட்டு போராட்டம் நடத்திய இடைநிலை, தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு, பணி வரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும்' என, செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின், எருமப்பட்டி ஒன்றிய செயற்குழு கூட்டம், அலங்காநத்தத்தில் நடந்தது. ஒன்றிய துணைத்தலைவர் சித்ரா தலைமை வகித்தார். இலக்கிய அணி அமைப்பாளர் நாகேஸ்வரி வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் கனகலிங்கம், செயற்குழு உறுப்பினர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் முருக செல்வராசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.

கூட்டத்தில், இடைநிலை உபரி ஆசிரியர்களை, ஒன்றியத்திற்குள் இருக்கும் காலி பணியிடங்களுக்குள் மட்டுமே பணியிட நிரவல் செய்ய வேண்டும். தொடக்க, நடுநிலை பள்ளிகளின் ஆங்கில வழிக்கல்வி வகுப்புகளுக்கு, கூடுதலாக ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும். 'சம வேலைக்கு சம ஊதியம்' வலியுறுத்தி, இடைநிலை, தொடக்கநிலை ஆசிரியர்கள், கடந்த, ஜன.,ல் மேற்கொண்ட போராட்ட நாட்களை, பணி வரன்முறைப்படுத்தி, போராட்ட நாட்களுக்கு உரிய ஊதியத்தை வழங்க வேண்டும்.

சட்டசபை தேர்தல் வாக்குறுதிப்படி, தமிழக அரசு, பழைய ஓய்வூதிய திட்டத்தை, ஆசிரியர், -அரசு ஊழியருக்கு விரைந்து அமல்படுத்த வேண்டும். உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ், இடைக்கால பணம் வழங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். கடந்த, ஐந்தாண்டு காலமாக வழங்கப்படாத தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுகளை வழங்கி, இடமாறுதல் கலந்தாய்வு நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us