/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெறி நாய்களை பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
/
வெறி நாய்களை பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
ADDED : மார் 15, 2024 02:49 AM
பள்ளிப்பாளையம்:காவிரி
குடியிருப்பு பகுதியில் சுற்றி வரும் வெறி நாய்களை பிடிக்க,
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மக்கள்
எதிர்பார்க்கின்றனர்.
பள்ளிப்பாளையம் ஒன்றியம், ஆலாம்பாளையம்
டவுன் பஞ்., பகுதியில் கரட்டாங்காடு, பிரேம் நகர், வ.உ.சி., நகர்
உள்ளிட்ட சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளில், வெறி நாய்கள்
தொல்லை அதிகரித்து வருகிறது. சாலையில் செல்லும் பொதுமக்கள்,
சிறுவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்தி செல்கிறது. சாலையின்
குறுக்கே ஓடுவதால், டூவீலரில் செல்வோர் விபத்தில் சிக்கி
கொள்கின்றனர்.
எனவே, வெறி நாய்களை உடனடியாக பிடிக்க, ஆலாம்பாளையம் டவுன் பஞ்., மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

