/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தி.மு.க., ஆலோசனைகூட்டத்தில் தள்ளுமுள்ளு
/
தி.மு.க., ஆலோசனைகூட்டத்தில் தள்ளுமுள்ளு
ADDED : ஏப் 20, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்:குமாரபாளையம் வடக்கு நகர, தி.மு.க., சார்பில், 14வது வார்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது. வார்டு செயலாளராக உள்ள விஸ்வநாதனுக்கு தகவல் தெரிவிக்காமல் கூட்டம் நடந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து கேட்பதற்காக, விஸ்வநாதன், கூட்டம் நடக்கும் இடத்திற்கு சென்றார்.
அங்கு, 'வார்டு செயலாளர் நான் இல்லாமல் எப்படி கூட்டம் நடத்தலாம்' என கேட்டார். அப்போது, 'நீங்கள் யார் இதுபற்றி கேட்க; நாங்கள் அப்படிதான் கூட்டம் நடத்துவோம்' என, எதிர் தரப்பினர் கூறியதால், இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

